திடீரென தீப்பிடித்து எரிந்த பைக் - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த உயிர்..?
கேரள மாநிலம் கொலானி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இம்சன் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர் உடனடியாக கீழே இறங்கினர். பின்னர், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதித்தது.
Next Story