`ஹிமாச்சல பேரிடர்' - கோர முகத்தை காட்டிய இயற்கை - 50க்கும் மேற்பட்டவர்கள் மாயம்
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு
காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
50க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை. இரண்டாவது
நாளாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
வியாழனன்று பெய்த மழையால் பல வீடுகள், பாலங்கள்
மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு
காரணமாக மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை பல
இடங்களில் சேதமடைந்துள்ளது. காணாமல் போனவர்களை
தேடும் பணியில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்
பட்டுள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகளை
சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story