TTR-ஐ சரமாரியாகதாக்கிய பயணிகள் - வெளியான பகீர் வீடியோ
மும்பை புறநகர் மின்சார ரயிலில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பர் சிங் சோதனை மேற்கொண்டபோது காலாவதியான பயணச்சீட்டுடன் பயணம் செய்த பயணியை அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பயணிகள் இருவர் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளனர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள், பயணியிடம் அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், ஜஸ்பர் சிங்கிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.
Next Story