காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது... சென்னைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை...
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...16ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ம் தேதியன்று, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் எனவும் பேட்டி...
  • அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று விடுமுறை என அறிவிப்பு....
  • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை...துணை மின் நிலையங்களில் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்குமாறு உத்தரவு...
  • சென்னையில் நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடி ஆய்வு...மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதிகளை பார்வையிட்டார்...
  • தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில், முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகின்றனர்...பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...
  • கனமழை எச்சரிக்கையால், சென்னையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் அலைமோதிய மக்கள்... பால், பிரட், மெழுகுவர்த்தி, முட்டை, காய்கனி போன்ற பொருட்கள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்தன...
  • திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி... நாழிக் கிணறு பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது...
  • சேலம் பனமரத்துப்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவியும், 10ம் வகுப்பு படித்து வந்த அவரது சகோதரரும் கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி...வெட்டுக் காயங்களுடன் மாணவியின் தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

Next Story

மேலும் செய்திகள்