"பாலியல் தொல்லை.. ஒன்றரை வருடமாக நடைபிணமாக.. த*கொலை செய்ய அனுமதி வேண்டும்" - கெஞ்சிய பெண் நீதிபதி

x

நீதிபதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய விரும்புவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பாரபரங்கியில் உள்ள நீதிமன்றத்தில், பெண் நீதிபதி பணியாற்றி வருகிறார். இவருக்கு மூத்த மாவட்ட நீதிபதி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார் மனுவை

உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பெண் நீதிபதி 2 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், தான் இனிமேலும் உயிர்வாழ விரும்பவில்லை என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபிணமாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மாவும், உயிரும் இல்லாத உடலை சுமந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், கண்ணியமான முறையில் தனது உயிரை விட அனுமதி தருமாறும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை படித்த தலைமை நீதிபதி சந்திரசூட், பெண் நீதிபதி பாலியல் புகார் தொடர்பான விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை தனக்கு அனுப்பி வைக்குமாறு, அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளரை கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்