இந்திய ரயில்வே எடுத்த அதிரடி முடிவு.. மக்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

x

இந்திய ரயில்வே எடுத்த அதிரடி முடிவு.. மக்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு


ரயிலில் பயணம் செய்பவர்கள் 120 நாட்களுக்கு முன்னதாகவே, டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை, இந்திய ரயில்வே பின்பற்றி வந்தது. இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவின் காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை 4 மாதங்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இனி பயணிகள் 2 மாதங்களுக்கு முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யமுடியும். இந்த 60 நாட்கள் காலக்கெடு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில குறிப்பிட்ட பகல் நேர ரயில்களுக்கான முன்பதிவில், எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்