"மகாலட்சுமி தெரியுமா?" ஷேவிங் செய்த நபரிடம் - ராகுல் காந்தி கேட்ட கேள்வி

x

அண்மையில் தான் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அத்தொகுதியில் உள்ள முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டார். சவரம் செய்து கொண்டே, அந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் அவரது வேலை, வருமானம் பற்றி ராகுல் கேட்டறிந்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மகாலட்சுமி எனும் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தெரியுமா என ராகுல் கேட்க, அந்தத் தொழிலாளி தெரியும் என்று பதிலளித்தார்... மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என அந்தத் தொழிலாளி கோரிக்கை விடுக்க, ராகுல் காந்தி அவற்றை செய்வதாய் உறுதியளித்தார். ராய்பரேலி போன்ற நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் நாடு முழுவதும் இது போன்ற லட்சக்கணக்கான திறமையான இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்