"370வது சட்ட பிரிவு நீக்கம்" சட்டப்பேரவையில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பரபரப்பு பேச்சு
ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அப்துல் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370வது சட்ட பிரிவை மீண்டும் வழங்க வலியுறுத்தி, மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வஹீத் ரஹ்மான் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, 2019 ஆகஸ்ட்டில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை எனவும், அவ்வாறு மக்கள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தால் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக வந்திருக்கும் என குறிப்பிட்டார். மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என குறிப்பிட்டார்.