உயிரை பறிக்க என்ட்ரி ஆகும் எமன்.. உஷார் நிலையில் தமிழகம் | Thanthitv | Kerala

x

கேரளாவில், நிபா வைரஸ் பாதிப்பால், 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். ஆய்வில், கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில், தமிழக சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார் , வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு

காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்