அயோத்தி ராமர் கோயிலில் கேரள ஆளுநர் வழிபாடு
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், அயோத்தி கோயிலில் வடிவமைப்பை கொண்ட நினைவு சின்னத்தை பரிசளித்தனர். மேலும், அவர் ராம பிரானை வணங்கும் காட்சியை கோயில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பொதுமக்களை ஈர்த்து வருகிறது. இஸ்லாமியரான ஆளுநர், அயோத்தி ராமர் கோயிலில் சென்று வணங்கும் காட்சி, கேரள மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Next Story