சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - 14-ஆம் தேதி சித்திரை விஷு கனி தரிசனம்
சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 14-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.
Next Story