காஷ்மீரில் திடீரென உள்வாங்கிய பூமி - அலறியடித்து ரோட்டுக்கு ஓடிவந்த மக்கள் காரணம் என்ன? - புவியியல்

x

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பூமி உள்வாங்கியுள்ளது. நிலப்பகுதி கீழ்நோக்கி செல்ல, அங்கிருந்த வீடுகள் எல்லாம் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பங்கள் விழுந்து மின்சார சேவை நின்றுள்ளது. உடனடியாக கிராமத்திலிருந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்கள் உடமைகளை தூக்கிக் கொண்டு பத்திரமான இடங்களை நோக்கிச் செல்கிறார்கள். நிலம் உள்வாங்கியதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய புவியியல் நிபுணர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்துள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். திடீரென நிலம் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்