"அணைக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமில்லை" - கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு

x

மேகதாது அணை கர்நாடக எல்லைக்குள் கட்டவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமேலவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் கேட்கவே உரிமை உள்ளதாகவும், அது ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வழங்க வேண்டும் என பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வறட்சி மற்றும் மழை குறைவான காலங்களில், இரு மாநிலங்களும், இருக்கும் தண்ணீரில் சராசரியை பிரித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேகதாது அணை கர்நாடகாவின் குடிநீர் மற்றும் மின் தேவைக்காக கர்நாடக எல்லைக்குள் கட்டப்படும் தடுப்பணை என்றும், இதற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், சில கட்சிகள் அரசியலுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்