ஒரே வார்த்தையில் செக் வைத்த மத்திய பிரதேச கோர்ட்...கரீனா கபூருக்கு பறந்த நோட்டீஸ்
2021 இல் வெளியிடப்பட்ட இப்புத்தகம் கரீனா கபூரின் கர்ப்ப கால பயணத்தை விவரித்து, கர்ப்பிணிகளுக்கான குறிப்புகளை வழங்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்தது... புத்தகத்தின் தலைப்பில் "பைபிள்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து கரீனா கபூர் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது... "பைபிள்" என்ற வார்த்தை ஏன் தலைப்பில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிள் உள்ள நிலையில், கரீனா கபூர் கானின் கர்ப்பத்தை பைபிளுடன் ஒப்பிடுவது தவறு என்றும், கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் வழக்கறிஞர் ஆண்டனி தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.