`விண்ணை அலங்கரித்த இந்திய பெருமை' நேரில் கண்டதும் மெய்சிலிர்த்த மாணவர்கள் - நெகிழ்ச்சி பேட்டி

x

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக, 175 புள்ளி 5 கிராம் எடையுள்ள இ.ஓ.எஸ்.-08 என்ற செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. பூமியை 24 மணிநேரமும் கண்காணிக்கும் இந்த செயற்கைக் கோள், பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை செய்யக்கூடியது. இந்த செயற்கைக் கோள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் மூலம், வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. மேலும், இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்