அதிருப்தி அடைந்த மூதாட்டி - அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்
கர்நாடகா மாநிலம் விராஜ்பேட்டையைச் சேர்ந்த சாந்தி போப்பண்ணா, அன்பளிப்பாக கொடுத்த நிலத்தை மகனும் பேத்தியும் விற்க முயன்றுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த மூதாட்டி, நிலத்தை அன்பளிப்பாக எழுதி கொடுத்ததை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூதாட்டியின் வாழ்நாள் முழுவதும், ஆண்டுதோறும் தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கும்படி மகன் மற்றும் பேத்திக்கு உத்தரவிட்டது. மூதாட்டி சாந்தி போப்பாணவுக்கு எதிராக குடகு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Next Story