தேர்தல் அறிக்கைக்கு பின் - பிரியங்கா காந்தியின் அதிரடி பேச்சு
ராஜஸ்தானில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது, தேர்தலுக்குப் பிறகு மறந்துவிடும் வெறும் அறிவிப்புகளின் பட்டியல் மட்டுமல்ல, அது நீதி கேட்கும் தேசத்தின் குரல் என்று குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்த பிரியங்கா காந்தி, வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க பாஜகவும், மோடி அரசும் என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். வாக்குறுதிகளை மட்டுமே அழைக்கும் பாஜக அவற்றை நிறைவேற்றுவதில்லை என குறிப்பிட்ட பிரியங்கா, பாஜக கொண்டு வந்த அக்னிவீர் திட்டம் மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்
Next Story