45 நாட்கள் தாமதம்..முடங்கிய வங்கி கணக்குகள்..வெகுண்டெழுந்த காங்கிரஸ் | Congress | Delhi High Court

x

வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு, வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்