IAS பயிற்சி மையத்தில் மாணவர்கள் உயிர் இழந்த விவகாரம் - கண் சிவந்த டெல்லி உயர்நீதிமன்றம்

x

மேற்கு டெல்லியின் ராஜேந்திர நகரில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி வெள்ளம் புகுந்ததில், இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், 4 பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிபதி, டெல்லி நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டிய நேரமிது எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் உள்ள பயிற்சி மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி, இவற்றை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவை, துணைநிலை ஆளுநர் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு அதன் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்