செல்போனில் வீடியோ கால்..மிரட்டி காருக்குள் செய்த அசிங்கம் தொக்காக சிக்கிய கர்நாடகா காங்கிரஸ் MLA

x

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்திருக்கும் புகாரில், சமூக சேவை செய்வதால் 2022 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. வினய் குல்கர்னியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். முதலில் சாதரணமாக பேச தொடங்கியவர், பின்னாளில் நிர்வாணமாக செல்போனில் வீடியோ அழைப்பு விடுத்ததாகவும், அப்போது வெளியே சொன்னால் அடியாட்களை அனுப்புவேன் என மிரட்டினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆகஸ்ட் மாதம் பெங்களுருக்கு சென்றபோது, வீட்டிற்கு அழைத்த விஜய் குல்கர்னி தன்னை காரில் கடத்திச் சென்று பெங்களூரு விமான நிலையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார் என குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரில் வினய் குல்கர்னி மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே 2022-க்கு பிறகு புகார் தெரிவித்திருக்கும் பெண்ணை சந்தித்ததே கிடையாது, சதி நடக்கிறது என்று பெண்ணுக்கு எதிராகவும், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராகவும் வினய் குல்கர்னி புகாரளித்துள்ளார். அவரது புகார் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்