ஒற்றை வீடியோவால் - வெடித்த சர்ச்சை - ஜே.பி.நட்டாவுக்கு பெங்களூரு போலீஸ் செக்

x

பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பெயரில் 3 முட்டைகள் இருப்பதைப் போன்றும், முஸ்லிம் என்ற பெயரில் மேலும் ஒரு முட்டை சேர்க்கப்பட்டு அதற்கு ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உணவளிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவை வெளியிட்டதற்காக கர்நாடக காங்கிரஸ் தரப்பில் பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காங்கிரஸின் புகாரின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், ஜே.பி.நட்டா, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோர் 7 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்