பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி - எச்சரிக்கை.. உச்சகட்ட பரபரப்பில் மும்பை
மும்பையில் உள்ள சபாத் ஹவுஸ் வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலின் பேரில், அங்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். புனேவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைதான நிலையில், இராஜஸ்தானில் தாக்குதல் நடத்த கடந்த 15 மாதங்களாக புனேவில் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சபாத் ஹவுஸ்-ன் புகைப்படங்கள் இருந்ததால், மும்பையிலும் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில், எப்போது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Next Story