ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தமான் பகுதியில் உள்ள கல்டி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீ கொழுந்துவிட்டு எரிந்து கரும்புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story