"பறவ" தொடங்கிய பயங்கர காய்ச்சல் - கொத்து கொத்தாக மடியும் சோகம்
"பறவ" தொடங்கிய பயங்கர காய்ச்சல் - கொத்து கொத்தாக மடியும் சோகம்
#kerala #thanthitv
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு, எடத்வா, செருதானா ஆகிய இடங்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாக இறந்தன. மூன்று இடங்களில் இருந்தும் வாத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. மூன்றிலும் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள வாத்துகளை அழிக்க மாநில அரசு உத்தரவிட்டது. நோய் பரவலை தடுக்க, பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வாத்து, அதன் இறைச்சி மற்றும் முட்டையை அழிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிலோ மீட்டருக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.