மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. பெண்களை தாக்கிய பாதுகாப்புப் படையினர்? ஆளில்லாத வீடுகளுக்கு தீ..
மணிப்பூரில், பாதுகாப்புப் படையினர் உடன் ஏற்பட்ட மோதலில் கலவரக்காரர்கள் ஆளில்லாத வீடுகளுக்கு தீ வைத்ததால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது...
மணிப்பூரில் மைத்தேயி - குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ள நிலையில், இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதனிடையே மியான்மர் எல்லை பகுதியான மோரே நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், பொருட்களை வாங்கச் சென்ற பெண்கள் சிலர், பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், கலவரக்காரர்கள் ஆளில்லாத வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் வனத்துறைக்கு சொந்தமான கட்டடமும் தீக்கிரையான நிலையில், மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.