இடம்பிடிக்க பாட்டி போட்ட பொருள்.. - மரணபீதியில் இறங்கி ஓடிய கண்டக்டர்..
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் மூதாட்டி ஒருவர், பேருந்து கண்ணாடியை உடைத்ததுடன், நடத்துனர் மீது பாம்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்கொண்டா வித்யாநகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பேருந்தில் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பேருந்தில் ஏற முடியாததால் ஆத்திரமடைந்த மூதாட்டி ஒருவர், பீர்பாட்டிலை எடுத்து வீசியதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பெண் நடத்துனர் விசாரித்தபோது, மூதாட்டி தனது பையில் இருந்த பாம்பை அவர் மீது வீசியுள்ளார். பின்னர் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது பையில் மேலும் 2 பாம்புகள் இருந்தது தெரியவந்தது.
Next Story