கணவனின் 2ம் கல்யாணத்திற்கு குழந்தையுடன் வந்த முதல் மனைவி - தாலியை கீழே போட்டு ஓடிய கணவன்
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பெத்த பண்டியாலா கிராமத்தை சேர்ந்த தம்பதி ராகேஷ் - சந்தியா. தம்பதிக்கு 8 வயதில் மகள் ஒருவர் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த ராகேஷ், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில், வேறொரு பெண்ணுடன் திருப்பதி மலையில் வைத்து ராகேஷூக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. இதனையறிந்த ராகேஷின் மனைவி சந்தியா, தன் குழந்தையுடன் சேர்ந்து திருப்பதி மலைக்கு விரைந்திருக்கிறார். திருமண மண்டபத்தில் மனைவியையும், குழந்தையையும் கண்டு அதிர்ச்சியடைந்த ராகேஷ், மணமேடையில் இருந்து ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து சந்தியா போலீசில் புகாரளித்த நிலையில், வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story