வெளியே பார்த்தால் சாப்பாடு.. உள்ளே செக்ஸ் ஆயில் டெலிவரி - பேக்கில் அந்த மாதிரி மாத்திரைகள்

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூரில், இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி பாய் போல் வேடமணிந்து போதைப்பொருள் விற்று வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், ஷேக் பிலால் என்ற இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், சொமேட்டோ ஊழியர்போல் வேடம் தரித்த இளைஞர், உணவு டெலிவரி செய்வதுபோல், போதை மாத்திரைகள் மற்றும் தாம்பத்ய உறவுக்கு பயன்படுத்தப்படும் செக்ஸ் ஆயிலை டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், இளைஞரை கைது செய்த போலீசார், இளைஞரிடம் இருந்து 15 கிராம் போதைப்பொருள், 22 கிலோ கஞ்சா மற்றும் நிட்டர்சன் மாத்திரைகளுடன், ஒரு கிலோ செக்ஸ் ஆயிலையும் பறிமுதல் செய்த நிலையில், அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் இளைஞரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்