ரூ.80 கோடி பட்ஜெட்டுக்கு கால்வாசி கூட தேறாத படத்தின் வசூல்.. சம்பளத்தை திருப்பி கொடுத்த பிரபல நடிகர்

x

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ரவிதேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்' என்ற தெலுங்கு திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 80 கோடி ரூபாயில் தயாரான இந்த திரைப்படம், வணிக ரீதியாக தோல்வியடைந்த நிலையில், படத்தின் வசூல் 15 கோடி ரூபாயை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில் நடிகர் ரவிதேஜா தனது சம்பளத்தில் இருந்து 4 கோடி ரூபாயையும், இயக்குநர் ஹரிஷ் சங்கர் 2 கோடி ரூபாயையும், தாங்களாகவே முன்வந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்