சாவர்க்கர் சிலையில் பச்சைக் கொடி... வெடித்த கலவரம்.. தொற்றிய பதற்றம் - இறங்கிய போலீஸ் படை

x

தெலங்கானாவில் சாவர்க்கர் சிலை மீது கட்டப்பட்ட பச்சை நிற கொடிகளை அவிழ்த்து இந்து அமைப்பினர் வீதியில் வீசிய நிலையில் இரு பிரிவினர் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாராயண பேட்டையில் உள்ள சாவர்க்கர் சிலையின் இருபுறமும் இஸ்லாமிய அமைப்பினர் 2 பச்சை நிற கொடிகளை கட்டி வைத்தனர். அந்த கொடிகளை இந்து அமைப்பினர் கழற்றி வீசி எறிந்தனர்... உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அங்கு குவிந்து இந்து அமைப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பானது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து கைகலப்பு கலவரமானது...

ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மேலும் ஆயுதப் படை போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர்களும் தடியடி நடத்தினர்.

இதில் 10 பேர் காயமடைந்ததாக தெரிய வந்துள்ள நிலையில் தற்போது நாராயணன் பேட்டை நகரம் முழு அளவில் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கள் சமூகத்தினர் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் தாக்குதல் நடத்தியதாக இரு பிரிவினரும் குற்றம் சாட்டியுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்