உடனே 5 ஆயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம்
தெலுங்கானாவில் வரும் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழக காவல்துறையிடம் இருந்து 5000 காவலர்களை அனுப்புமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தெலுங்கானாவில் உள்ள காவலர்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவலர்கள் பற்றாக்குறை காரணமாக, தமிழக ஊர்க்காவல் படையினர் 5 அயிரம் பேரை தேர்தலுக்காக அனுப்புமாறும், வரும் 27ஆம் தேதியிலிருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 5 நாட்கள் தேர்தல் பணிக்காக தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
Next Story