தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் - களமிறங்கிய தேர்தல் ஆணையம்
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய குழு அம்மாநிலம் சென்றுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணிகளை மதிப்பிடுவதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான இந்தியத் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு, 3 நாள் பயணமாக தெலங்கானா சென்றடைந்தது. தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை இக்குழு நடத்துகிறது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் இதர கவர்ச்சிகளின் செல்வாக்கை சரிபார்க்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் மற்றும் மாநில மற்றும் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரிகள், தேர்தல் தயார் நிலை குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணைய குழு அதிகாரிகளிடம் விளக்குவார்கள் என கூறப்படுகிறது.