தமிழகம் டூ கர்நாடகாவுக்கு மெட்ரோ ரயில் - வெளியான குட் நியூஸ்

x

தமிழகம் - கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை

அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியும், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அடிப்படையிலும், அத்திப்பள்ளி வழியாக, ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனை இறுதி செய்வதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மகேஷ்வர் ராவ்வை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஓசூர் பகுதியை நேரடியாகப் பார்வையிட்டதுடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்