பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் கூடுதல் தவணையாக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது...
கடந்த 12ஆம் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் தவணையாக 71 ஆயிரத்து 61 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது. தற்போது கூடுதல் தவணையாக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து நடப்பு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று தவணைகளில் வரி பகிர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பங்காக 5 ஆயிரத்து 797 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்திற்கு 25 ஆயிரத்து 495 கோடியும், பீகாருக்கு 14 ஆயிரத்து 295 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்திற்கு 11 ஆயிரத்து 157 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மேற்குவங்கத்திற்கு 10 ஆயிரத்து 692 கோடியும், ராஜஸ்தானுக்கு 8 ஆயிரத்து 564 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
Next Story