வண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு...கோழி, வாத்து இருந்தா ரிட்டர்ன் தான் - எல்லையில் பறந்த உத்தரவு

x

ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சலால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டிற்குள் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க, தமிழக ஆந்திர எல்லையான வேலூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கால்நடைத்துறையினர் முகாம் அமைத்து, ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கோழி, வாத்து உள்ளிட்டவற்றை கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவற்றை திருப்பி அனுப்பி வருகின்றனர். சரக்காடு, சைனகுண்டா மற்றும் பரதராமி ஆகிய தமிழக - ஆந்திர எல்லை பகுதிகளிலும், இந்த பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்