"நாங்க ஆந்திராவா..?" - அத்தனை ஆவணங்கள் இருந்து தவிக்கும் அவலம் போராட்டத்தில் குதித்த தமிழ் மக்கள்
வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆறு காலமாதமாக கிராம மக்கள் வீட்டு வரி கட்டி வந்ததற்கு ரசீது வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வீட்டுமனை பட்டா இருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்தி ரசீது பெற முடியும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் நாராயணபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Next Story