ஸ்வீட் பாக்ஸ் வித் 5000 பணம்..அட இன்னும் தேர்தல் தேதியே சொல்லல.. சிக்கிய ஆந்திரா ஆளுங்கட்சி

x

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஆந்திரா எம்.எல்.ஏ, ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலோடு வரவுள்ளது. இதனையொட்டி, அம்மாநில ஆளுங்கட்சியான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸின் கித்தலூர் தொகுதி எம்எல்ஏ ராம் பாபு, ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதில் பங்கேற்ற கிராம தன்னார்வல ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் அடங்கிய ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், எம்எல்ஏ ராம் பாபு ஓட்டுக்கு பணம் அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்