"போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு" மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்?
போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு செய்ததாக தம்மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வாங்கிய சுரேஷ் கோபி அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் போலி ஆவணம் மூலம் சுரேஷ் கோபி கார் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story