உச்ச நீதிமன்ற நீதி தேவதை சிலையில் தலைகீழ் மாற்றம்

x

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், கண்கள் மூடப்பட்ட நீதி தேவதையின் ஒரு கையில் தராசும், மறு கையில் வாளும் இடம்பெற்றிருந்தது. நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கு காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை குறிப்பதாக அமைந்திருந்தது. இடது கையில் இருக்கும் வாள், வரலாற்று ரீதியில் தண்டிப்பதையும், அதிகாரத்தை நிலைநாட்டுவதையும் குறித்திருந்தது. இந்நிலையில் காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, கண்களில் கட்டியிருந்த கருப்பு துணி அகற்றப்பட்டு, கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீதி தேவதையின் நெற்றியில் திலகமும் இடம்பெற்றுள்ளது. இது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான நூலகத்தில், தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்