ஜாமின் கொடுத்து ED-க்கு ஷாக்கில் உறையவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
ஜாமீனில் விடுவது விதி, சிறையில் அடைப்பது விதிவிலக்கு என்ற கொள்கை, சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேனின் நெருங்கிய கூட்டாளி என கருதப்படும் பிரேம் பிரகாஷ், சட்டவிரோத சுரங்க வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு கூறியது. ஜாமீனில் விடுவது விதி, சிறையில் அடைப்பது என்பது விதிவிலக்கு என்ற சட்டபூர்வ கொள்கை, சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளுக்கும் பொருந்தும் என்று கூறி, இதன் அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தர விட்டது.
Next Story