மத்திய அரசுக்கு எதிராக பொது நல வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி | Delhi | Supreme Court

x

ஜூன் 25ஆம் தேதியை, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சமீர் மலிக் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசமைப்பு சாசனம் 352ஆம் பிரிவின் படியான அவசரநிலை பிரகடனத்தை அரசமைப்பு சாசன படுகொலை என வர்ணிக்க முடியாது என்றும், இது தொடர்பாக மத்திய அரசின் அறிவிக்கை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு, இது விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்