அயோத்தி நேரலை விவகாரம்... சிபிஐ விசாரணை கோரி மனு... `நோ' சொன்ன சுப்ரீம் கோர்ட்

x

தமிழக கோயில்களில், அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலையை தடுத்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக தமிழக பாஜகவைச் சேர்ந்த பி.வினோஜ் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கோயில்களில் அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலையை தடுத்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை சார்ந்த 288 விண்ணப்பங்களில், 252 நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும், 36 நிகழ்வுகளுக்கு சட்டம் ஒழுங்கு காரணமாக அனுமதி வழங்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த தகவலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்