ED வழக்கில் பாயிண்டை பிடித்த உச்ச நீதிமன்றம் - கெஜ்ரிவாலுக்கு திறக்க போகும் சிறை கதவு?

x

#supremecourt | #kejriwal | #ed

ED வழக்கில் பாயிண்டை பிடித்த உச்ச நீதிமன்றம்

கெஜ்ரிவாலுக்கு திறக்க போகும் சிறை கதவு?

தீர்ப்பை தீர்மானித்த 10வது வாக்குமூலம்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சஞ்சய் சிங்கிற்கு

பெயில் கிடைத்துள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும்

பெயில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அது குறித்த விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.

டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 5 முக்கிய

தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபான விற்பனை உரிமையை தனியார்களுக்கு வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக 2022 ஆகஸ்ட்டில் 15 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக PMLA சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், டெல்லி மாநில முன்னாள் அமைச்சர்கள் சத்யேந்திர குமார் ஜெயின், மணிஷ் சிஸோடியா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

2024 மார்ச்சில் பி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.சியும் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமீன்

மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. லஞ்சமாக பெறப்பட்ட பணம் எதுவும் இதுவரை கைபற்றப்படவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், அப்ரூவராக மாறியுள்ள அரோரா அளித்த பத்தாவது வாக்குமூலத்தில் தான் சஞ்சய் சிங் பற்றி குறிப்பிட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. முதல் ஒன்பது வாக்குமூலங்களில் சஞ்சய் சிங்கின் பெயரை

அரோரா குறிப்பிடவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கிலும், இதுவரை லஞ்சத் தொகை எதுவும் அவரிடம் இருந்து கைபற்றப்படவில்லை என்பது ஒப்பிடத்தக்கது.

அவரின் வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள சரத் ரெட்டி மற்றும் ராகவ் மகுந்தா ஆகியோரின் முதல் கட்ட வாக்குமூலங்களில், கெஜ்ரிவால் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

எனவே இந்த வழக்கில் அரவிந்த கெரிவாலுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்