SBI-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த உச்ச நீதிமன்றம்

x

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Vovt

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கும் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை அதன் இணையதளத்தில் மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஏடிஆர் அமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, பாரத ஸ்டேட் வங்கியின் மனுவைத் தள்ளுபடி செய்து அதன் வாதங்களை நிராகரித்து மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்