"ஆப்பிள் நிறுவனத்திற்கு சம்மன்.." - வெளியான முக்கிய தகவல்
'ஆழ்ந்த கவலையை' வெளிப்படுத்தியுள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, வரும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்படும் தகவலை தெரிவித்துள்ளது. முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களில் 'அத்துமீறி ஊடுருவல்' முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைத் தகவலை அனுப்பி இருந்தது. இந்த 'ஹேக்கிங்' குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story