சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு...பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி | PM Modi | India

x

சிக்கிம் மாநிலத்தின் லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பால், டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீர‌ர்கள் மாயமான நிலையில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. டீஸ்டா ஆற்றில் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கைக்கு குறைவாக உள்ளதால், ஆபத்து இல்லை என மத்திய நீர்வளத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் ஆகிய மாவட்டங்களில் 8-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் தமங் சிங், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, முதலமைச்சர் தமங் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, சிக்கிம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்