திருப்பதியில் திடீர் ஆர்ப்பாட்டம்..! போராட்டத்தில் குதித்த 5000 பக்தர்கள்-பிரமோற்சவத்தில் பரபரப்பு

x

பிரமோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு சென்ற சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சமைக்க அனுமதி கோரி திருப்பதி மலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது திருப்பதி மலைக்கு செல்லும் ராமானுஜதாச பக்தர்கள், அங்கு விரதம் இருந்து சமைத்து சாப்பிட்டு அன்னதானம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அறைகளை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு செய்து கொடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைகளில் சமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எந்த சூழலிலும் வெளியில் சாப்பிடாத அவர்கள், தற்போது உணவகங்கள், தேவஸ்தான அன்னதான சத்திரம் ஆகியவற்றில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சமைக்க அனுமதி கோரி ஏராளமான பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்