அரசுப் படை மீது திடீர் தாக்குதல்... தலையிட்ட உலக நாடுகள்.. பலியான 8 வீரர்கள் | Yemen

x

தெற்கு மாகாணமாக லாஜ்-ன் (Lahj) யஃபே (Yafae) பிராந்தியத்தில் அரசுப் படைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்... அரசுப் படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த மோதலில் 15 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் 8 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது. இம்மோதல் குறித்து ஹவுதி குழு வாய் திறக்கவில்லை. மேற்கு ஆசிய நாடான ஏமனில், 2014 முதலே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐநா தலையிட்டு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சித்த போதும் சண்டை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்திய மோதல் ஐநாவின் முயற்சிகளை நீர்த்துப் போகச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்