ரூ.6,000 பதில் ரூ.6.3 கோடி வரவு..ஆடம்பரமாக செலவு செய்த மாணவி - நீதிமன்றம் கொடுத்த வினோத தண்டனை..
தவறுதலாக தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 6 கோடி ரூபாயை, தென் ஆப்ரிக்க மாணவி செலவு செய்த விவகாரம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 2017-ல், சிபோங்கிலே மணி (Sibongile Mani) என்ற மாணவியின் வங்கி கணக்கில், ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகைக்கு பதிலாக தவறுதலாக 6 கோடியே 30 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 4 லட்ச ரூபாயை மாணவி ஆடம்பரமாக செலவு செய்த நிலையில், வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டு, 5 ஆண்டுகள் மாணவிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 14 வாரங்கள் சமூக சேவையில் ஈடுபட மாணவிக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலையில் அவரது தண்டனையை ரத்து செய்தது. இந்த விவகாரம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
Next Story