அண்டை நாட்டில் ஒலித்த பாரதியின் பாடல்.. சுட்டி காட்டி அதிபர் சொன்ன அட்வைஸ்

x

நாட்டு நலனுக்காக ஒருமித்த கருத்துடன் ஒன்றிணையுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் பாரதியார் கவிதையை அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்தார்... நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், பாரதியின் முப்பது கோடி முகமுடையாள் பாடலை சுட்டிக் காட்டி, பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் நாட்டிற்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட முடியாமல் போனது ஏன் என கேள்வி எழுப்பினார். பொது நோக்கத்துடன் ஒன்றுபட வேண்டும் என கொள்கை விளக்க உரையின் போது அவர் வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்